Tuesday, December 29, 2009

மதுக்கூரில் கோலாகல திருவிழா

காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 125வது ஆண்டு விழாவும்
அய்யா வாசன் அவர்களின் பிறந்த நாள் விழாவும்
கோலாகலமாக மதுக்கூரில் நடந்தது.

நமதூர் பேருந்து நிலையத்தில் மதியம் 3 மணி முதலே
காங்கிரஸின் மூவர்ண கொடியுடன் கட்சி தொண்டர்கள்
தலைவர்கள் என வரவே.. கதர் சட்டைகள் தென்படவே,
சோழமண்டலத்தின் முக்கிய தலைவர்களும் வரவே,
இது போதாதன்று ஊர்வலத்தை களை கட்ட..
அலங்கரிக்கப்பட்ட யானையும்,
மூவர்ண கொடியுடன் குதிரையும்..
மதுக்கூர் வட்டாரமே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமான ஊர்வலம் செல்ல..

ஊர்வலம் புறப்படுவதற்கு முன்னதாக
காங்கிரஸ் கொடியேற்றி விட்டு ஊர்வலம் புறப்பட
மெல்ல மெல்ல பேருந்து நிலையத்தில் இருந்து
ஊர்வலம் புறப்பட்டு முக்கூட்டுச்சாலை வழியாக
விழா மண்டபத்தை அடைந்தது.
ஊர்வலத்தில் காங்கிரஸார் மட்டுமல்லாது
அனைத்து தரப்பு மக்களும் பங்குபெற்றனர்.
ஏராளனமான பெண்களும் திரளாக வந்து இருந்தனர்.

மண்டபம் நிகழ்ச்சிகள் துவங்கி, பலரும் உரையாற்றினர்.
புதிதாக பலரும் காங்கிரஸ் பேரியக்கத்தில் இனைந்தனர்.
நிகழ்ச்சியில் பலரும் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு நமது காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினர்
அய்யா வாசனால் நமது பகுதிக்கு கண்டெடுக்கப்பட்ட,
தேர்ந்து எடுக்கப்பட்ட மரியாதைக்குரிய N.R.ரெங்கராஜன் அவர்கள்
தலைமை தாங்கி இறுதியாக உரையும் ஆற்றினார்.
'எங்களை நம்பி வந்த யாரையும் 'கை'விட மாட்டோம்'
என உறுதி மொழியுடன் தனது உரையை முடித்தார்.
நிகழ்ச்சிக்குப்பின் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


இந்த நிகழ்ச்சி
மதுக்கூர் வட்டாரத்தில் காங்கிரஸின் பலத்தையும்
உயிரோட்டத்தையும் பறைசாற்றியோதோடு மட்டுமல்லாமல்,
தேசிய கட்சிக்கு கிராமங்களில் இன்னும் மக்கள் ஆதரவு
இருப்பதை நிருபிக்கும் விதமாக அமைந்தது.

Friday, December 25, 2009

125 வது ஆண்டு விழா

இந்திய தேசிய காங்கிரஸ்
125 வது ஆண்டு விழா
மக்கள் தலைவர் மத்திய அமைச்சர்
மாண்புமிகு திரு G.K.வாசன் பிறந்த நாள் விழா
நாள் : 28.12.2009
நேரம்: மாலை 3.00 மணி
இடம்: VRT திருமண மண்டபம் மதுக்கூர்
இந்த விழாவை மிக விமரிசையாக
கொண்டாட காங்கிரஸ் காரிய கமிட்டி
முடிவு செய்துள்ளது..
இதற்காக மதுக்கூர் நகரை
'ப்ளெக்ஸ்'கள் அலங்கரித்தவன்னம் இருக்கிறது.
மாவட்ட காங்கிரஸின் பல முக்கிய
பெருந்தலைவர்கள் இதில் பங்கேற்க வருகிறார்கள்.

இதற்கான அழைப்பிதழ் இதோ உங்களுக்காக..



அனைவரும் வருக! வருக!! வருக!!!

Wednesday, December 23, 2009

ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு
செயல்படுத்தி வரும்,
மகாத்மா காந்தி
ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்

தமிழகத்தில் சிறப்பாக நடைபெறும்
அத்திட்டத்தின் பயன் விபரங்கள்:-

பயனடைந்த குடும்பங்கள் 30,23,332

வேலை வாய்ப்பு பெற்றவர்கள் 1,00,214

வங்கி/ தபால் அலுவலகக் கணக்கு மூலம்
வழங்கப்பட்ட மொத்தம் ஊதியம் ரூபாய் 1.54 கோடி

இத்திட்டத்தின்கீழ் இதுவரை
செலவு செய்யப்பட்ட தொகை ரூபாய் 1,164,47 கோடி

தொடரட்டும் இத்திட்டம்!
உயரட்டும் ஏழைகளின் வாழ்க்கை தரம்!!

Saturday, December 19, 2009

மக்கள் தலைவருக்கு விழா

மதுக்கூரில் மக்கள் தலைவருக்கு விழா
மதுக்கூரில் மக்கள் தலைவர்
அய்யா வாசனுக்கு பிறந்த நாள் விழா

சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி
தினமும் கூடி ஆலோசனை செய்து வருகிறது.
இந்த ஆலோசனையில் நமது மதிப்பிற்குரிய
எம்.எல்.ஏ.வும் தினமும் வந்து கலந்துக் கொள்கிறார்.
விழா விபரங்கள் விரைவில் தருகிறோம்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

2009-10ஆம் ஆண்டிற்கான
தொகுதி மேம்பாட்டுத் திட்டம்- பணிகள்
மதுக்கூர் வட்டாரம்

கச்சாவீடு மேம்பாடு :
--------------------
மதுரபாஷாணிபுரம் -15,000/-
வேப்பங்குளம்(5) -75,000/-
பாவாஜிக்கோட்டை -15,000/-
சொக்கனாவூர் -15,000/-

தொகுதி வீடுகள் மேம்பாடு
-------------------------
சிரமேல்குடி(2) -30,000/-
ஒலயகுன்னம்(2) -30,000/-
மன்னங்காடு(16) -2,40,000/-

சத்துணவு கூடம்
அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி -80,000/-
மதுக்கூர்

சமுதாய கூடம்
வாட்டாகுடி தெற்கு ஊராட்சி -7,50,000/-

ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய
சிறுமின் விசைத்திட்டம்
அத்திவெட்டி ஊராட்சி கோவில்காடு -2,00,000/-

தார்சாலைகள்
---------------
காசாங்காடு -3,00,000/-
காடந்தகுடி -2,00,000/-
கீழக்குறிச்சி -2,75,000/-
அத்திவெட்டி -4,20,000/-
பழவேறிக்காடு -4,00,000/-
விக்ரமம் -4,00,000/-
மன்னங்காடு -3,50,000/-
28, நெம்மேலி -3,00,000/-
மூத்தாக்குறிச்சி -4,00,000/-
மதுக்கூர் வடக்கு -4,00,000/-

பள்ளிகளுக்கு பெஞ்சுகள் மற்றும் டெஸ்க்குகள்:-

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடையக்காடு 20,000/-
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சூரியதோட்டம் 20,000/-
ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி சந்தைப்பேட்டை 20,000/-
ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி பிள்ளையார்கோவில்தெரு 20,000/-
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இராமம்பாள்புரம் 20,000/-
அரசினர் உயர் நிலைப்பள்ளி பெரியகோட்டை 75,000/-
அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மதுக்கூர் 3,00,000/-

தொகுதி மேம்பாட்டுத் திட்டப்பணிகள்
மதுக்கூர் பேரூராட்சி

1)வள்ளியங்குளத்தெரு தார்சாலை - 2,50,000/-
2)பஜனை மடத்தெரு சிமெண்ட் சாலை - 1,70,000/-
3)புதுத்தெரு சிரமேல்குடி இனைப்பு சிமெண்ட் சாலை - 80,000/-
------------
5,00,000/- லட்சம்
--------------

Thursday, December 17, 2009

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு..

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு
125 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இந்திய நாட்டின் விடுதலையை முன்னிலைப்படுத்தி
உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி, நாட்டுக்கு விடுதலை

பெற்றுத் தந்ததோடு, ஆட்சிப் பொறுப்பேற்று, நலத்திட்டங்களை
நிறைவேற்றிவரும் இயக்கமாக கடந்த 125 ஆண்டுகால வரலாற்று பின்னணியோடு
இயங்குவது குறித்து பெருமிதம் கொண்டு, அதன் பெருமைகளையும்
சிறப்புகளையும் மக்களுக்கு விளக்கவேண்டிய கடமை காங்கிரஸ்
கட்சியினருக்கு இருக்கிறது.

Saturday, December 12, 2009

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை...

சென்னை:“தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நம் லட்சியம். அதற்கேற்ப நாம் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்,” என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசினார்.வடசென்னை மாவட்டத்தில் அ.தி.மு.க., பிரமுகர் செல்வம் மற்றும் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து ஆயிரம் பேர் காங்கிரசில் இணைந்தனர். இதற்கான விழா, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ தலைமை வகித்தார்.

மத்திய அமைச்சர் வாசன் பங்கேற்று, கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசியதாவது:

காமராஜர் ஆட்சிக் காலத்தில் தான் தமிழகம் பல்வேறு துறைகளிலும் முன்னேறி, இந்தியாவின் முதல் மாநிலமாக இருந்தது. தமிழகத்தில் 43 ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை என்றாலும், கட்சி இன்னமும் உயிரோட்டத்துடன் உள்ளது. இதற்கு அடிமட்டத் தொண்டர்கள் தான் காரணம். தினமும் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். இளைஞர் காங்கிரசில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 14.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தனிச்சிறப்பு உண்டு. பிற கட்சிகளின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் இருக்கிறோம். தமிழகத்தில் முதல் இயக்கமாக மாறவேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நம் லட்சியம். அதற்கேற்ப அனைவரும் ஒன்றிணைந்து கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு வாசன் பேசினார்.

<செய்தி வலைப்பதிவில் மறுபதிப்பு>

Friday, December 11, 2009

மனதார பாராட்டுகிறோம்!

அமெரிக்கா சென்ற நமது பிரதமர்
திரைகடலோடி திரவியம் தேடச் சென்று
அங்கே வாழும் இந்திய வம்சா வளியினர் மற்றும்

புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களை சந்தித்த போது
வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும்
மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்து
இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்
என்று அழைப்பு விடுத்த,
முதல் பாரத பிரதமரே..
உங்களை மனமார பாராட்டுகிறோம்!
வாழ்த்துகிறோம்!!

உறுப்பினர்கள் சேர்க்கை

புதியதோர் உலகம் செய்வோம்


காங்கிரஸ் பேரியக்கத்தில்
புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேரலாம்.

மேலதிக தொடர்புக்கு
திரு. R. பன்னீர் செல்வம்
99658 59542

திரு.R.புஷ்பனாதன்
98654 22630


உறுப்பினர் சேர்க்கையின் கடைசி தேதி டிஸம்பர் 20 2009

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய்

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய்
இலவச தடுப்பு ஊசி முகாம்
1 வயது முதல்
15 வயது வரை உள்ளவர்கள்
இந்த திட்டத்தின் மூலன் பயன் அடையலாம்.
அருகே உள்ள
ஆரம்ப சுகாதார நிலையம்



இந்த திட்டம்
அந்தந்த பகுதிகளில்
உள்ள பள்ளிகளில்
மருத்துவ முகாம் நடத்தி
அதன் மூலம் குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த திட்டம் தமிழகம் முழுவதும்
பரவலாக நடைமுறை படுத்தப்படுகிறது.

Thursday, December 10, 2009

காங்கிரஸ் அலுவலகம்

நமது காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகம்
நமதூர் பேருந்து நிலையத்தின் இடது புறத்தில் அமைந்துள்ளது.
காலை பத்து மணி முதல் இதன் அலுவலக நேரம் தொடங்கும்.
இதில் வருகையாளர்களாக நீங்கள் தினமும் வரலாம்.
இயக்கத்தின் பணிகளுக்காகவும் வரலாம்
தாங்கள் வருகைக்கு நன்றி!

நமது சட்ட மன்ற உறுப்பினர்



நமதூரின் வளர்ச்சிக்கும்
நமது காங்கிரஸ் பேரியக்கத்துக்கும்
இன்னும் நமதூரில் நல்ல பல திட்டங்கள் வர
பெரிதும் உறுதுனையாக நிற்கும்
நமது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
அய்யா .. என். ஆர். ரெங்கராஜன் அவர்களுக்கு
நமது மதுக்கூர் கிளையின் சார்பாக
நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


(அய்யா நமதூருக்கு செய்த,
நமது பகுதிகளுக்கு செய்த
நற்பணிகள் விரைவில்
ஒரு தொகுப்பாக வலைப்பதிவில் வெளிவரும்.)

வலைப்பதிவின் அறிமுகம்

அன்பான

இந்த தேசத்தின் குடிமக்களே!
இந் நாட்டின் மன்னர்களே!!
நமது மதுக்கூரின் மக்களே!!!

அகில இந்திய பாரம்பரிய
காங்கிரஸ் பேரியக்கத்தின்
மதுக்கூர் கிளைக்காக இந்த வலைப்பதிவை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த வலைப்பதிவை உருவாக்கியதின் நோக்கம்
நமது இயக்கத்தின் செய்திகளை
பணிகளை, நடவடிக்கைகளை, நிகழ்ச்சிகளை,
மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளை தெரியப்படுத்தும் நோக்கத்தோடும்,
இன்னும் இயக்க பணிகள் தொய்வில்லாமல் தொடரவும்
நமது மக்கள் நம்மோடு ஒரு ஐக்கியமாகவும்
இந்த வலைப்பதிவை உங்களுக்காக அர்பணிக்கிறோம்.

இனி நமது ஊரில்
நமது கிளையின் பணிகள்
தொய்வில்லாமல் தொடர
நமது பேரியக்கத்தில் இனையுங்கள்