Tuesday, December 29, 2009

மதுக்கூரில் கோலாகல திருவிழா

காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 125வது ஆண்டு விழாவும்
அய்யா வாசன் அவர்களின் பிறந்த நாள் விழாவும்
கோலாகலமாக மதுக்கூரில் நடந்தது.

நமதூர் பேருந்து நிலையத்தில் மதியம் 3 மணி முதலே
காங்கிரஸின் மூவர்ண கொடியுடன் கட்சி தொண்டர்கள்
தலைவர்கள் என வரவே.. கதர் சட்டைகள் தென்படவே,
சோழமண்டலத்தின் முக்கிய தலைவர்களும் வரவே,
இது போதாதன்று ஊர்வலத்தை களை கட்ட..
அலங்கரிக்கப்பட்ட யானையும்,
மூவர்ண கொடியுடன் குதிரையும்..
மதுக்கூர் வட்டாரமே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமான ஊர்வலம் செல்ல..

ஊர்வலம் புறப்படுவதற்கு முன்னதாக
காங்கிரஸ் கொடியேற்றி விட்டு ஊர்வலம் புறப்பட
மெல்ல மெல்ல பேருந்து நிலையத்தில் இருந்து
ஊர்வலம் புறப்பட்டு முக்கூட்டுச்சாலை வழியாக
விழா மண்டபத்தை அடைந்தது.
ஊர்வலத்தில் காங்கிரஸார் மட்டுமல்லாது
அனைத்து தரப்பு மக்களும் பங்குபெற்றனர்.
ஏராளனமான பெண்களும் திரளாக வந்து இருந்தனர்.

மண்டபம் நிகழ்ச்சிகள் துவங்கி, பலரும் உரையாற்றினர்.
புதிதாக பலரும் காங்கிரஸ் பேரியக்கத்தில் இனைந்தனர்.
நிகழ்ச்சியில் பலரும் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு நமது காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினர்
அய்யா வாசனால் நமது பகுதிக்கு கண்டெடுக்கப்பட்ட,
தேர்ந்து எடுக்கப்பட்ட மரியாதைக்குரிய N.R.ரெங்கராஜன் அவர்கள்
தலைமை தாங்கி இறுதியாக உரையும் ஆற்றினார்.
'எங்களை நம்பி வந்த யாரையும் 'கை'விட மாட்டோம்'
என உறுதி மொழியுடன் தனது உரையை முடித்தார்.
நிகழ்ச்சிக்குப்பின் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


இந்த நிகழ்ச்சி
மதுக்கூர் வட்டாரத்தில் காங்கிரஸின் பலத்தையும்
உயிரோட்டத்தையும் பறைசாற்றியோதோடு மட்டுமல்லாமல்,
தேசிய கட்சிக்கு கிராமங்களில் இன்னும் மக்கள் ஆதரவு
இருப்பதை நிருபிக்கும் விதமாக அமைந்தது.

No comments:

Post a Comment