Saturday, December 12, 2009

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை...

சென்னை:“தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நம் லட்சியம். அதற்கேற்ப நாம் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்,” என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசினார்.வடசென்னை மாவட்டத்தில் அ.தி.மு.க., பிரமுகர் செல்வம் மற்றும் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து ஆயிரம் பேர் காங்கிரசில் இணைந்தனர். இதற்கான விழா, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ தலைமை வகித்தார்.

மத்திய அமைச்சர் வாசன் பங்கேற்று, கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசியதாவது:

காமராஜர் ஆட்சிக் காலத்தில் தான் தமிழகம் பல்வேறு துறைகளிலும் முன்னேறி, இந்தியாவின் முதல் மாநிலமாக இருந்தது. தமிழகத்தில் 43 ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை என்றாலும், கட்சி இன்னமும் உயிரோட்டத்துடன் உள்ளது. இதற்கு அடிமட்டத் தொண்டர்கள் தான் காரணம். தினமும் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். இளைஞர் காங்கிரசில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 14.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தனிச்சிறப்பு உண்டு. பிற கட்சிகளின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் இருக்கிறோம். தமிழகத்தில் முதல் இயக்கமாக மாறவேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நம் லட்சியம். அதற்கேற்ப அனைவரும் ஒன்றிணைந்து கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு வாசன் பேசினார்.

<செய்தி வலைப்பதிவில் மறுபதிப்பு>

No comments:

Post a Comment