Saturday, May 14, 2011

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில்
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட N.R.ரெங்கராஜன் அவர்கள்
வெற்றிப்பெற்றுள்ளார்கள். இது அவருக்கு மூன்றாவது முறையாகும்.
இந்த தேர்தலில் அவர் 8799 வாக்குகள் வித்தியாசத்தில்
தனக்கு அடுத்த வந்த தேமுதிக வேட்பாளர் செந்தில்குமாரை விட 8799
வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நமது இனையம் சார்பாக வாழ்த்துக்கள்.


நமது தொகுதி வாக்குகள் விபரம்

மொத்த வாக்குகள் 187593
பதிவானவை : 145708
தபால் வாக்குகள் : 694
செல்லாதவை : 80
காங்கிரஸ் : 55842
தேமுதிக 46703
சுயேட்சை 22066

இவர்களை தவிர
இதர கட்சிகள் அனைத்தும்
டெபாசிட் இழந்தன..

நமது தொகுதியை பொறுத்தவரை
திரு N.R.ரெங்கராஜன் அவர்கள்
வெற்றி பெறுவது மூன்றாவது முறையாகும்.
முதலில் 2001 சட்டமன்ற தேர்தலிலும்
பின்னர் 2006 தேர்தலிலும்
இப்போது 2011 தேர்தலிலும் வென்றுள்ளார்.
இவ்வளவு எதிர்ப்பு அலையிலும்
இவர் வெற்றிபெற்றது
மக்கள் வைத்துள்ள நண்மதிப்பே ஆகும்.


இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால்
காங்கிரஸ் சார்பாக சட்ட மன்றத்தில் தலைவராகும்
வாய்ப்பு இவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
--

Monday, April 4, 2011

வாக்குகள் சேகரிக்க....



election news


வாக்கு சேகரிப்புக்காக
நேற்று மாலை நமதூரில்
தெருவெங்கும் நமது வேட்பாளருடன்
நமது அனைத்து கூட்டனி கட்சியினரும்
பெரும் திரளாக சென்றனர். சென்ற இடமெல்லாம்
மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
பல இடங்களில் பட்டாசும் வெடித்தனர்.
மக்கள் கூடும் இடங்களில் நமது எம்.எல்.ஏ. உரையாற்றினார்.
பலரும் பொன்னாடை போர்த்தினர்.
மாலை அணிவித்தனர்.
இதோ சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு...




Tuesday, March 29, 2011

தேர்தல் அலுவலகம்

2011 தேர்தலில் நமது பட்டுக்கோட்டை தொகுதியின்
சட்ட மன்ற வேட்பாளராக நமது எம்.எல்.ஏ. என்.ஆர்.
மீன்டும் நமது தொகுதியில் நிற்கிறார்.
இந்த தேர்தலுக்கான தேர்தல் அலுவலகம்
முக்கூட்டுச்சாலையில் இருந்து
பேருந்து நிலையம் செல்லும் சாலையில்
திமுக அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
இதே தேர்தல் அலுவலகத்தில்
ஒரு ஆலோசனை அமர்வில்...

Friday, October 8, 2010

நாளை திருச்சி வரும்
அன்னை சோனியா அவர்களை வரவேற்க
நமது ஊரில் இருந்து கட்சியினரையும் அழைத்துச் செல்லவும்
காங்கிரஸ் காரிய கமிட்டி தயாராகி வருகிறது.